தடுப்பூசி அட்டை பாதுகாப்பு பிரிவினரால் பல இடங்களிலும் பரிசோதனை!!
மட்டக்களப்பில் கொவிட்19 தடுப்பூசி அட்டை ,பொலிஸ் மற்றும் இரானுவத்தினரால் பல இடங்களிலும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவது ஒரு தற்காலிக பாதுகாப்பாக இருந்தாலும் ,தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே உயிரிழப்புகளில் இருந்து பாதுகாப்பு ஏற்படுத்தும் என சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை ,பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன், மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாடுபூராகவும் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இம்மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பூஸ்டர் தடுப்பூசியினை இதுவரை ஏற்றிக் கொள்ளவில்லை. தமக்கான பூஸ்டர் தடுப்பூசியினை ஏற்றிக் கொள்ளுமாறும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஜீ. சுகுனன் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
பொது இடங்களுக்கு வரும் மக்கள் முழுமையாக கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டதை உறுதி செய்யும் அட்டையினை தம்முடன் வைத்திக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர் .