;
Athirady Tamil News

இராணுவத்தினரால் கிளிநொச்சியில் சமூகப் பணிகள்…!!

0

மனிதாபிமானமுள்ள இராணுவத்தினால் கண்ணன் தேவாலய வளாகத்தில் சனிக்கிழமை (05) கிளிநொச்சியை சேர்ந்த 42 வறிய குடும்பங்களுக்கு பிரதேசத்திலுள்ள நன்கொடையாளர்களின் உதவியுடன் உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இத்திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி சஞ்சய வணசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 571, 572 மற்றும் 573 வது பிரிகேடின் சிப்பாய்களால் முன்னெடுக்கப்பட்டது.

காரைநகர் மற்றும் இளமந்தலாறு மற்றும் பணிக்குளம் கிராம உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் குழந்தைகளுடன் வாழும் வறிய குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பகிர்ந்தளிக்கப்பட்ட உலர் நிவாரண பொதிகளில் அரிசி, பருப்பு, நெத்தலி, பால்மா, காரப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், ஊட்டச்சத்துள்ள உணவுகள், பொதி செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் ஒவ்வொரு பொதியும் 2750/= பெறுமதியானதாகவும் காணப்பட்டது.

இராணுவத்தின் சமூக பணிகளை பாராட்டும் விதமாக நன்கொடையாளர்கள் இத்திட்டத்திற்கு நன்கொடைகளை வழங்க முன்வந்திருந்தனர்.

இந்நிகழ்வில் 57 வது படைப்பிரிவு தளபதியின் சார்பில் 9 வது இலங்கை சிங்கப் படையணியின் மேஜர் சீஎம்ஜீஎன்எஸ் சமரசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்ததோடு, ஏனைய அதிகாரிகள் சிலரும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.