சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது வழித்தட திட்ட அறிக்கை – மத்திய அரசு விளக்கம்….!!!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் மூன்று மெட்ரோ ரயில் பாதைகளை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மாதவரம் முதல் சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் பூந்தமல்லி பைபாஸ் வரை மற்றும் மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில்
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்டு செலவு ரூ.63,246 கோடி. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இதற்கான முன்மொழிவு மத்திய அரசின் செயல்முறை மற்றும் ஒப்புதலின் கீழ் உள்ளது. இந்த திட்டத்தை 2026 இறுதிக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தமிழ்நாடு, டெல்லி மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து மெட்ரோ ரயில் திட்டங்களை அமல்படுத்த 16 திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மெட்ரோ ரயில் கொள்கையின்படி நகரங்களில் இது போன்ற திட்டங்களுக்கான நிதி உதவியை, திட்டங்களின் சாத்தியம், நிதி ஆதாரம், மாநிலங்களின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கி வருகிறது வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.