“பாராளுமன்ற ஒழுங்கு விதிகள்” பிரதமரிடம் வழங்கிவைப்பு!!
“பாராளுமன்ற ஒழுங்கு விதிகள்” மதிப்பாய்வு நூலின் இரண்டாவது தொகுப்பு பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க அவர்களினால் இன்று (11) பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கிவைக்கப்பட்டது.
சட்டமியற்றும் முறை, நிலையான அபிவிருத்தி, தேர்தல் முறைமை மற்றும் அதன் திருத்தங்கள், பாராளுமன்ற அறிக்கை மற்றும் ஊடகங்கள், மக்கள் தொடர்பு மற்றும் இலங்கைப் பெண்களின் அரசியலின் போக்கு ஆகிய துறைகளில் கல்வித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அறிஞர்களின் கட்டுரைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கடந்த 8ஆம் திகதி வெளியிடப்பட்ட “பாராளுமன்ற ஒழுங்கு விதிகள்” மதிப்பாய்வு நூல் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் வெளியீடாக நூலகங்கள் மற்றும் ஏனைய துறையினருக்கு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாவது தொகுதிக்கான நடவடிக்கைகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க, பணிப்பாளர் சட்டமியற்றும் சேவைகள்ஃ தொடர்பாடல் பணிப்பாளர் (பதில்) எச்.ஈ.ஜனகாந்த சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.