அரச சொத்தை துஷ்பிரயோகம் செய்வோருக்கு “ஆப்பு” ரெடி !!
அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் மகன்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதும், அல்லது சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியிருப்பதும் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சர் அல்லது எம்.பி பதவியை உடனடியாக நீக்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் மகன்கள் அல்லது உறவினர்கள் அரச வாகனங்கள் அல்லது பிற அரசு சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக 34 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு வாகனங்கள் அல்லது பிற சொத்துக்களை தவறாக பயன்படுத்தும் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் மகன்கள், மனைவிகள் அல்லது உறவினர்கள் குறித்து உடனடியாக தகவல் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்க உளவுத்துறைக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க வாகனங்கள் அல்லது ஏனைய சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் உறவினர்கள் 16 பேர் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.