யாழ் – மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு நவீன ரக கண் சத்திரசிகிச்சை இயந்திர தொகுதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.!! (படங்கள், வீடியோ)
யாழ்ப்பாணம் – மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு நவீன ரக கண் சத்திரசிகிச்சை இயந்திர தொகுதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
காரைநகர், வாரிவளவைச் சேர்ந்த வைத்தியர் அமரர் இளையதம்பியின் ஞாபகார்த்தமாக அவரது பிள்ளைகளினால் நவீன ரக கண் சத்திர சிகிச்சை இயந்திர தொகுதி
அன்பளிப்பு செய்யப்பட்டது.
42 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன கண்சத்திர சிகிச்சை இயந்திர தொகுதி மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் இன்று வைத்தியர் அமரர் இளைய தம்பியின் புதல்வர்களால் கையளிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”