;
Athirady Tamil News

ஒருங்கிணைப்பு மேலதிகமாக திட்டங்களை மேற்கொள்ளவும் தயார்!!

0

சேதன பசளை உற்பத்திச் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்புக்கு மேலதிகமாக அது தொடர்பிலான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கும் இயலுமை இராணுவத்திற்கு உள்ளது. மேலும் இயலாதவையென ஒன்றுமில்லை என்பதால் உற்பத்திக்கு அவசியமான அடிப்படை வசதிகள் மற்றும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்து போக்குவரத்துச் செய்வதில் சிக்கல்கள் இருப்பின் அவற்றை நிவர்த்திக்கும் இயலுமையும் இராணுவத்திடம் உள்ளதென பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ​நேற்று (11) பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் கூட்டத்தில் தெரிவித்தார்.

சிறுபோக உற்பத்தியை இலக்காக கொண்டு இராணுவம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை மேற்கொண்டுள்ளதோடு, அதற்கான கலந்துரையாடல்கள் மாவட்ட செயலகங்கள், விவசாய துறைசார் நிபுணர்களுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இதன்போது விவசாய சமூகங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த போது அவர்கள் தரை மட்டத்திலான தொடரச்சியான விழிப்புணர்வுச் செயற்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தாகவும் தெரிவித்தார்.

அதனால் அதற்காக இராணுவம் ஒத்துழைப்பு வழங்க தயார் நிலையில் உள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் ´லக் பொஹொர´ உர நிறுவனம், உர செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியுமென ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷ, விவசாய அமைச்சின் செயலாளர் திரு. டி.எம்.எல்.டி. பண்டாரநாயக்க, தீர்மானம் எடுக்கும் அதிகாரமுள்ள, அரசாங்க அதிகாரிகள், மாவட்ட மட்டத்திலான பங்குதாரர்களும் சூம் தொழில்நுட்பத்தின் உதவியோடு அமர்வில் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாய அமைச்சின் செயலாளர் திரு டி.எம்.எல்.டி பண்டாரநாயக்கவினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து இக்கூட்டத்தின் நோக்கம் மற்றும் மாவட்ட மட்ட பிரதிநிதிகளுடனான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் என்பன தொடர்பில் விளக்கமளித்தார்.

அத்தோடு, விவசாய இராஜாங்க அமைச்சு தேசிய அளவில் சேதன பசளை விநியோகத்தை ஆரம்பித்துள்ள நிலையில், பெரும்போகத்தின் போது ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களை நிவர்த்திப்பதற்கான தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் விவசாய அமைச்சின் செயலாளர், ´பசுமை விவசாயக் திட்டத்தின்´ வெற்றிக்கு அனைத்து பொறுப்புள்ள தரப்புக்களும் தங்களின் சிறந்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் மாவட்ட மட்டத்திலான சேதன பசளை உற்பத்திகள் மேற்கொள்ளப்பட உள்ளனவென தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்‌ஷ, இக்குழுவில், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் அடங்குவர். உர உற்பத்தி, அளவு, போக்குவரத்து, சேமிப்பு, விவசாயிகளுக்கு விநியோகம் ஆகிய முழுப் பொறுப்பு, மற்றும் அதன் பயன்பாடு அந்தந்த மாவட்ட குழுக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், இராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் இராணுவ வழங்கல் தளபதி பிரிகேடியர் சந்தன அரங்கல்ல,பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர்கள் மற்றும் பல அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.