;
Athirady Tamil News

2-வது மனைவியை விவாரத்து செய்த நாளில் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 49 வயது அரசியல் பிரமுகர்…!!

0

பாகிஸ்தானின் பிரபல கட்சியின் பிரமுகராக இருப்பவர் ஆமிர் லியாகத். இவருக்கு 49 வயதாகிறது. இவர் ஏற்கனவே, முதல் மனைவியை விவாரத்து செய்துவிட்டு 2-வது திருமணம் செய்திருந்தார். 2-வது மனைவி கடந்த புதன்கிழமை ஆமிர் லியாகத்திடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்தார்.

உடனடியாக, லியாகத் 18 வயதான இளம் பெண்ணை அன்றைய தினமே திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை அவர் நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துள்ள லியாகத், தனது நலம் விரும்பிகள், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நான் இருண்ட சுரங்கப்பாதையை கடந்து வந்துள்ளேன். அது தவறான திருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

18 வயதான சியாடா டேனியா ஷா லியாகத்தை திருமணம் செய்தது குறித்து கூறுகையில் ‘‘எனக்கு சிறு வயதில் இருந்து அவரை பிடிக்கும். நான் சிறுவயதில் இருக்கும்போது தொலைக்காட்சியில் அவரை பார்ப்பேன். நான் அழும்போதெல்லாம், என்னுடைய பெற்றோர், டி.வி.யில் அவரது படத்தை காண்பிப்பார்கள்’’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.