கோவா சட்டசபை தேர்தல் பிரச்சாரம் நிறைவு – நாளை வாக்குப் பதிவு…!!!
கோவா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து அங்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. கோவா சட்ட சபைக்கு மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் இந்த முறை 332வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
உத்தர பிரதேச சட்ட சபைக்கு மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7
கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்டமாக 58 தொகுதிகளுக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து, 2-ம் கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.இந்த தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெற்றது.2ஆம் கட்ட தேர்தலில் மொத்தம் 584 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்த மாநில காவல் துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.