;
Athirady Tamil News

போதைக்கு அடிமையாகும் இள வயதினர் !!

0

கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறுவர்கள் இள வயதினர் போதைப்பொருள் பாவனை மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள நிலமை அதிகளவிலேயே காணப்படுகின்றன.

அதாவது 21 வயதிற்கு உட்பட்ட வயதினரை உடையவர்கள் அதிகளவில் போதைப்பொருள் பாவனை மற்றும் மது பழக்கம் புகைத்தல் ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளனர்.

கடந்த கால யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மதுபான உற்பத்தி விற்பனைகள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கு சிறுவர்களைப் பயன் படுத்துதல் போன்ற காரணங்களால் சிறுவர்கள் மற்றும் இள வயதினர் மட்டத்தினை மதுப்பழக்கத்திற்கு உட்படுத்துவதற்கான சூழலாக காணப்படுவதனாலும் இவ்வாறு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை கானப்படுகின்றது.

இதனைவிட வெளிமாவட்டங்களிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் போதைப்பொருட்கள் விற்பனைக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்படுதல் போன்ற செயற்பாடுகள் காணப்படுகின்றன.

அதாவது கிளிநொச்சி பாரதிபுரம் மற்றும் கிளிநொச்சி நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனைக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்;பட்ட நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனைவிட சட்டவிரோத கசிப்பு விற்பனைகளுக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

குறிப்பிட்ட சில குடும்பங்கள் தங்களின் குடும்ப வருமானத்திற்காக சிறுவர்;களை பயன்படுத்தியும் குறித்த குடும்பங்களும் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபட்டுவருவதானது சிறுவர்கள் மற்றும் இள வயதினரை போதைப்பொருள் மதுபாவனை புகைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு துண்டுகின்றன.

எனவே இவற்றை கட்டுப்படுத்த ஒவ்வொரு பெற்றோர்களும் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் மூலம் தான் இவற்றை தடுக்க முடியும் என சமுக ஆர்வலர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.