பயன்தரு தென்னை மரங்களை அழித்த காட்டு யானைகள்!!
கிளிநொச்சி கண்ணகைபுரம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெருமளவான பயன்தரு தென்னை மரங்களை அழித்துள்ளன.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகை புரம் கிராமத்தில் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் வாழ்வாதார பயிர்களான தென்னை மற்றும் ஏனைய பயன்தரு மரங்களை அழித்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லை காணப்பட்டாலும் கண்ணகை புரம் கிராமத்தில் காட்டு யானைகள் பாதிப்பு இல்லாத நிலை காணப்பட்டது
இந்த நிலையில் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் இவ்வாறு பெருமளவான பயன்தரு மரங்களை அழித்துள்ளன.
இவ்வாறு காட்டு யானைகளின் தாக்கத்துக்கு உள்ளாகியமை தொடர்பில் கிராம அலுவலரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் கிராம அலுவலர் சம்பவம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்
குறிப்பாக அக்கராயன் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பகுதிகளுக்கான யானை வேலிகளை அமைக்கின்ற போது இந்தப் பிரதேசங்களில் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் பிரதேச விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.