;
Athirady Tamil News

அரிய வகை கழுகு மீட்பு !!

0

அரிய வகை வெள்ளை நிற கழுகு ஒன்றை , சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த நபரொருவர், புத்தளத்தில் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், பாலாவி இரண்டாம் கட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் ஒன்றின், குறித்த வீட்டில் சோதனை செய்த போதே, சந்தேக நபர் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து HALIEETUS LEUCOGWTER (WHITE BELLIED SEA EAGLE) இனத்தைச் சேர்ந்த அரிய வகை வெள்ளை நிற கழுகு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அரிய வகைக் வெள்ளை நிற கழுகு விற்பனை செய்வதற்காக சந்தேகநபர் வீட்டில் வைத்து வளர்த்து வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸாரும், புத்தளம் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.