தெல்லிப்பழையில் 32.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(11.02.2022) இரவு-08.30 மணி முதல் நேற்றுச் சனிக்கிழமை(12.02.2022) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் 32.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி ரி. பிரதீபன் தெரிவித்தார்.
மேற்படி காலப் பகுதியில் பருத்தித்துறையில் 21.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், யாழ்.மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 20 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை(10.02.2022) இரவு-08.30 மணி முதல் நேற்று வெள்ளிக்கிழமை(11.02.2022) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் பருத்தித்துறைப் பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 78.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”