;
Athirady Tamil News

மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது !!

0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில், நேற்றிரவு 2 படகுகளுடன் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை தலைமன்னாருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட 12 பேரும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் என இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.