யாழில் “எழில் மிகு கிராமம்” வேலைத்திட்டம்!! (வீடியோ)
யாழில் “எழில் மிகு கிராமம்” வேலைத்திட்டம் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சால் எதிர் வரும் தினங்களில் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நளாயினி இன்பராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எழில்மிகு கிராமம் வளமான வாழ்வு எனும் தொனிப்பொருளிலே அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கைக்கு அமைவாகவும் வடக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டுதலுக்கு அமைவாகவும் உள்ளூராட்சி அமைச்சு அதற்குக் கீழுள்ள திணைக்களங்களும் பங்குதாரர்களும் அனுசரணையாளர்களும் இணைந்து செயற்ப்படுத்துகின்ற முதலாவது செயற்றிட்டமாக இருக்கின்றது.
காங்கேசன்துறை வீதியில் இருந்து ஆரம்பித்து செம்மணி வீதி வரை முடவடைகின்ற 4.12 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான கல்வியங்காடு கொக்குவில் ஆடியபாதம் வீதியை தூய்மைப்படுத்துதலும் பாதசாரிகளின் உடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தலும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் தான் உங்களுடைய இந்த செயற்றிட்டத்தின் உடைய முதலாவது செயற்பாடாக காணப்படுகின்றது.
இந்த செயல் திட்டமானது முதலாவது செயல் திட்டமாக அமைகின்றது இதனுடைய ஆரம்ப கட்டமானது எதிர் வரும் 18.01.2022 கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் முன்றலில் வைபவ ரீதியாக எங்களது குழுவின் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதனுடைய தொடர்ச்சியான தன்மை அந்தந்த திணைக்களங்களின் ஆளும் அப்பகுதியில் வாழ்கின்ற பொதுமக்களின் ஆளும் தொடர்ச்சியாக பெறப்படும் என்பதனை கூறிக் கொள்கின்றேன். உண்மையாகவே இந்த செயற்றிட்டத்தினுடைய வளர்ச்சிக்கு எமது அமைச்சின் உடைய செயலாளர் , தமது அமைச்சின் கீழுள்ள உள்ளுராட்சி ஆணையாளர் அவருடைய உத்தியோகத்தர்கள் அதேபோல வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் அவரது உத்தியோகத்தர்கள் அதேபோல உள்ளுராட்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள நல்லூர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அவர்கள் உறுப்பினர்கள் செயலாளர் அவர்களுடைய உத்தியோகத்தர்கள் அத்துடன் நல்லூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் அவருடைய உத்தியோகத்தர்கள் எமது அவர்களுடைய உத்தியோகத்தர்கள் அனைவரும் விசயத்திற்காக சென்ற வாரங்களில் இருந்து தங்களுடைய உத்தியோகத்தர்களின் ஊடாக பூரண ஒத்துழைப்பினை ரீதியில் வசிக்கின்ற பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கிக் கொண்டு வருகின்றார்கள் விஜய் திட்டம் நிச்சயமாக ஒரு நிறைவான அல்லது மக்களுக்கு பயன் உடைய சேற்று இடமாக அமையும் என எதிர்பார்க்கின்றோம் இச்செயற்றிட்டத்தை தொடர்ந்து எமது அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் இருக்கையில் ஒப்படைக்கப்பட்டுள்ள வீதிகளில் அனைத்து நீதி விளக்கும் இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்
இவ் இணை ஊடக சந்திப்பில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் பொறியிலாளர் S.சிவநேசன் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் ஆகியோரும் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”