வல்லிபுர கோவிலில் 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சங்கிலிகள் அறுப்பு!!
வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது , ஐந்து பக்தர்களின் தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அதன் போது , ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களில் ஐந்து பேரின் தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது. அவ்வாறு அறுக்கப்பட்ட ஐந்து தங்க சங்கிலிகளும் 8 அரை பவுண் நிறையடைய சுமார் 10 இலட்ச ரூபாய் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”