;
Athirady Tamil News

’அரசியல்வாதிகளுக்கு சாபம் விடுவர்’ !!

0

நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய வளம் இலங்கையின் இளைஞர்கள் என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எம்.பி, நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் கடமையை நிறைவேற்றாவிட்டால் இன்றைய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு இளைஞர்கள் சாபம் விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இளைஞர்கள் நம்பிக்கையை இழக்கும் முன்னர் அவர்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு பாராளுமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கையை அரசாங்கம் உடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நேற்று (16) அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

பொருளாதாரம் இன்னும் மோசமடைந்து வருகிறது எனவும் டொலர் மற்றும் ரூபாய் பற்றாக்குறை இன்றும் தீர்க்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஒரு டொலருக்கான ரூபாயின் உண்மையான மதிப்பு இன்று ரூ. 250 எனவும் அது ரூ. 275 ரூபாயாக அதிகரிக்கக்கூடும் என்றும் அதோடு நிறுத்தவில்லை என்றால், வருட முடிவுக்குள் 300 ரூபாயாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நடுத்தர வர்க்க சமூகம் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும், பொருளாதார ஏணியில் இருந்து கீழே தள்ளப்படுவதாகவும் தெரிவித்த அவர், விவசாயத் துறை அழிந்துவிட்டது எனவும் சிறு மற்றும் பெரு வணிகர்கள் தங்கள் வேலையைச் செய்ய பொருட்களை வாங்க முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

ஜூன், ஜூலை மாதங்களுக்குள் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடனை மீண்டும் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் இன்னும் நிலைமை குறித்து விவாதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அரசியலமைப்பின் 4 வது பிரிவின் கீழ், ஒவ்வொரு உறுப்பு நாடும் ஆண்டுக்கு ஒரு முறை அதன் பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியக் குழு கடந்த டிசெம்பர் மாதம் இலங்கை வந்தடைந்தாகவும் அதற்கமைய. அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறியமுடிவதாக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் அதிலிருந்து அடிப்படைக் கோட்பாடுகள் குறித்தும் ஒருமித்த கருத்துக்கு வர முடியுமா என்று பார்ப்போம். இது எங்கள் கடமை என்று தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்துக்கான ஒரு திட்டத்தை நாம் வைத்திருக்க வேண்டும் எனவும் நமக்கு ஒரு குறுகிய கால திட்டமும் தேவை, அதே போல் இதை முன்னோக்கி கொண்டு செல்ல நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் தேவை. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த உதவும் பொருளாதாரக் கட்டமைப்பை நாங்கள் கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நீண்ட கால மற்றும் குறுகிய காலத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், ஒரு திட்டம் நிறைவேற 15 ஆண்டுகள் செல்லும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.