வவுனியா மாவட்ட பொது வைத்திசாலையின் புதிய பணிப்பாளராக ஜே. எம். நிலக்ஸன் நியமனம்!!
வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் ஜே. எம். நிலக்ஸன் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வைத்தியசாலை பணிப்பாளர் ராகுலன் படிப்புக்காக சென்ற நிலையில் வைத்தியசாலையில் நிலவும் பணிப்பாளர் வெற்றிடத்திற்கு வவுனியா மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஜே. எம். நிலக்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கோவிட் வவுனியா மாவட்டத்தினை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலப்பகுதியில் அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்புசிகள் வழங்கல் , சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதர்களுடன் இணைந்து மாவட்டத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து சிறப்பாக செயற்பட்டு வைத்தியர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.