பூஸ்டர் தடுப்பூசிக்கு மேலதிகமாக நான்காவது டோஸ்!!
விசேட சூழ்நிலை காரணமாக பூஸ்டர் ஊசியை செலுத்தி ஒரு மாதத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு டோஸை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சில தடுப்பூசிகள் வெளிநாட்டு சட்டங்களின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக, சில நாடுகள் சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றுக்கொள்வதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டு பைஸர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு ஒரு மாதம் கழித்து பைஸர் தடுப்பூசியின் மற்றொரு டோஸ் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் அவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.