;
Athirady Tamil News

‘ஒயின்’ பருகுவது கொரோனாவில் இருந்து காக்கும்: புதிய ஆய்வில் தகவல்…!!

0

‘தண்ணி அடிப்பவர்களை கொரோனா ஒண்ணும் செய்யாது’ என்று மதுப்பிரியர்கள் சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. அது சரியாக இருக்குமோ என்று எண்ணத் தூண்டும் வகையில், சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது.

ஊட்டச்சத்தியல் குறித்த பிரபல இதழில் வெளியான அந்த ஆய்வுக்கட்டுரை, அதன் கண்டுபிடிப்புகளுக்காகவே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வாரம் 1 முதல் 4 கோப்பை சிவப்பு ஒயின் பருகுவது, கொரோனா தொற்று பாதிப்பு அபாயத்தை 10 சதவீதம் அளவுக்கு குறைக்கிறதாம். அதேவேளையில், வாரம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பைகள் சிவப்பு ஒயின் அருந்துவதால் கொரோனா அபாயம் 17 சதவீதம் அளவுக்கு குறைகிறதாம்.

இந்த விஷயத்தில் வெள்ளை ஒயினும், சாம்பைனும் கூட நன்மை அளிக்கின்றன என்றாலும், அவற்றின் பலன் சிவப்பு ஒயினுடன் ஒப்பிடும்போது குறைவுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

‘சரிதான்… இந்த ஆய்வு முடிவை மதுக்கோப்பையை கையில் ஏந்தி கொண்டாட வேண்டியதுதான்’ என்று மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைய வேண்டாம்.

பீர் அருந்துவது, கொரோனா தொற்று அபாயத்தை 7 மடங்கு (728 சதவீதம்) அளவுக்கு அதிகரிக்கிறதாம். தவிர, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வை, அப்படியே நடைமுறையில் பொருத்திப் பார்க்க முடியாது. ஆல்கஹால் பானங்களால் தீமையே அதிகம் என்று மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள் வாதிடுகிறார்கள்.

ஆக மொத்தம், தடுப்பூசி, முககவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி என்று கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பான ‘கவசங்களையே’ நம்புவது நலம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.