கைவிடப்பட்ட மைதானத்தினால் 10 கோடி ரூபாய் நட்டம் !!
நுவரெலியாவில் விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் சுமார் 10 கோடி ரூபாவிற்கு அதிக தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு மைதானம் 2019 ஆம் ஆண்டு பொது மக்களின் பாவனைக்கு திறக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 2020 ஆம் ஆண்டில் இது மூடப்படும் என்று அலுவலகம் தெரிவித்துள்ளது.
நுவரெலியாவில் விளையாட்டு அமைச்சுக்கு சொந்தமான 34 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உயரமான மைதான வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இத்திட்டத்திற்கான மொத்த பெறுமதி 75,75,528,700 ரூபாய் ஆகும்.
இந்த நிதித் தொகையில் 70 சதவீதம் பிரித்தானிய நிதி நிறுவனத்தின் ஊடாகவும், எஞ்சிய தொகையை மக்கள் வங்கி ஊடாகவும் கடன் அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டது.
இந்தப் பணம் செலுத்தப்பட்டதாக வங்கிக் கணக்காய்வு அறிக்கை கூறுகிறது.
மேலும், சம்பள அலுவலக உபகரணங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக 2019ல் 53,551,631 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும் தற்போது இந்த மைதான கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதனால் 10 கோடி ரூபாவிற்கு அதிக தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவிக்கின்றது.
மெய்வல்லுநர் போட்டிகள், கபடி, கூடைபந்து, ஹொக்கி, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களை நடத்தும் வகையில் இந்த விளையாட்டு மைதான தொகுதி நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது.