;
Athirady Tamil News

புதிய மின் இணைப்புகளை வழங்குவதிலும் தாமதம் !!

0

இலங்கை மின்சார சபையிடம் தேவையான உபகரணங்கள் இல்லாததன் காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சில பிரதேசங்களுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டணங்களை செலுத்திப் பல மாதங்கள் கடந்த போதிலும் புதிய மின் இணைப்புகளை வழங்குவதைத் தாமதப்படுத்தியுள்ள மின்சார சபை, மின் கட்டணத்தைச் செலுத்தத் தாமதமாகும் போது இணைப்பைத் துண்டிப்பதோடு அபராதம் வசூலிப்பது நியாயமற்றது எனவும் பாவனையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கொட்டாவ பிரதேசத்தில் சில புதிய மின் பாவனையாவார்களுக்குப் பணம் செலுத்தி 6 மாதங்களாகியும் இதுவரை மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என பாவனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மீற்றர் மற்றும் ஏனைய உபகரணங்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைவில் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாகவும் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டொலர் பிரச்சினை காரணமாக புதிய உபகரணங்களை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், லங்கா மின்சார நிறுவனம் (லெகோ) திட்டமிட்டபடி புதிய மின்சாரத்தை வழங்குவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.