;
Athirady Tamil News

5 மாதக் குழந்தையுடன் கணவன் தலைமறைவு – மனைவி முறைப்பாடு!!

0

நீதிமன்றத்தின் இடைக்கால கட்டளைக்கு அமைவாக 5 மாதக் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்காமல் கணவன் தலைமறைவாகிவிட்டாரென மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
கணவன் மனைவி முரண்பாடு காரணமாக , 5 மாதக் குழந்தையை கணவன் தன்னுடன் கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பில் மனைவி இளவாலைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மல்லாகம் நீதிமன்றுக்கு விடயம் பாரப்படுத்தப்பட்டது . நீதிமன்றில் குழந்தையின்றி முன்னிலையான கணவனிடம், தாய்ப்பால் குடிக்கும் குழந்தை என்பதால் மனைவியிடம் குழந்தையை ஒப்படைக்குமாறு இடைக்காலக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதன் பின்னரே கணவன், குழந்தையுடன் தலைமறைவாகிவிட்டாரெனத் தெரிவித்து மனைவியால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.