உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்…!!
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் நேற்று ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மொத்தம் 1,500 போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடந்ததாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் டொனெட்ஸ்கில் பகுதியில் 591 மீறல்களும், லுகான்ஸ்கில் 975 மீறல்களும் பதிவாகி உள்ளன. இது கடந்த எட்டு ஆண்டுகாலமாக தொடரும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதலில் இது அதிகபட்சமாக கருதப்படுகிறது.
உக்ரைனின் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற பகுதி அருகே சில நூறு மீட்டர் தூரத்தில் மோட்டார் குண்டுகள் விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.