;
Athirady Tamil News

எல்லையின் நிலையே சீனாவுடனான உறவை தீர்மானிக்கும் – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி கருத்து…!

0

ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாடு குழு விவாதத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பின்னர் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பிரச்சனை என்னவென்றால், 45 ஆண்டுகளாக நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. 1975 முதல் எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
நாங்கள் ராணுவப் படைகளை கொண்டு வரக்கூடாது என்று சீனாவுடன் ஒப்பந்தம் செய்தோம். நாங்கள் அதை எல்லை என்று அழைக்கிறோம்.

ஆனால் அது உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு. சீனர்கள் அந்த ஒப்பந்தங்களை மீறினர். எல்லையின் நிலை உறவின் நிலையை தீர்மானிக்கும். இது இயற்கையானது.

எனவே வெளிப்படையாக இப்போது சீனாவுடனான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளன. இந்தியாவுடனான எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்களை 2020 இல் சீனா புறக்கணித்தது.

ஒரு பெரிய நாடு எழுதப்பட்ட உறுதிமொழிகளை புறக்கணிக்கும் போது, ​​அது முழு சர்வதேச சமூகத்திற்கும் பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெய்சங்கர், ஸ்வென்ஜா ஷூல்ஸ்

இதைத் தொடர்ந்து ஜெர்மனியின் பொருளாதார மேம்பாட்டு மந்திரி ஸ்வென்ஜா ஷூல்ஸை,ஜெய்சங்கர், சந்தித்து பேசினார்.

பசுமை வளர்ச்சி மற்றும் சுத்தமான தொழில்நுட்பத்தைமேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை நாங்கள் பகிர்ந்து கொண்டதாக தமது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அயர்லாந்து வெளியுறவு மந்திரி சைமன் கோவினியை சந்தித்தது குறித்தும் தமது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.