தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கான பொதுக்கூட்டம்!!
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கான பொதுக்கூட்டம் இன்று (20.02.2022) காலை 10.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க கலாவினோதன் மண்டபத்தில் முன்னாள் தலைவர்.ஆர்.சிவராஜா தலைமையில் இடம்பெற்றது.
புதிய நிர்வாக சபைத் தலைவர் எஸ்.சிறீகஜன்
உபதலைவர்கள் ..யாழ்.தர்மினி பத்மநாதன் மற்றும் லியோ நிரோஷ தர்ஷன்
செயலாளர் கே.ஜேந்திரன்
உப செயலாளர் .சு சிவசண்முகநாதன்
பொருளாளர் ப. விக்னேஸ்வரன்
உப பொருளாளர் எஸ். வாஸ் கூஞ்ஞை
உட்பட. ஆர். சிவராஜா , எஸ். அனந்த பால கிட்ணர் , என். ஜெயகாந்தன் , வி.பிரியதர்ஷன் , ஆர். சேதுராமன் , கி. லக்ஸ்மன் சிசில் , பிரியங்கா சந்திரசேகரம் , கே.ஹரேந்திரன் , கே. பிரசன்னகுமார் ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
மேலும் வடமாகாண இணைப்பாளர் கணபதி சர்வானந்தா ,கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ். சரவணன் மற்றும் மலையக இணைப்பாளர் சி.சிவகுமார் ஆகியோருடன் ஒன்றியத்தின் மேலதிக இணைப்பாளராக யாழ். தர்மினி பத்மநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருட கால கொரோணா நெருக்கடிநிலையின் பின் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”