பழங்குடி இன சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் – 5 பேர் கும்பல் கைது….!!
சத்தீஸ்கர் மாநிலம் ஜெஸ்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பழங்குடியின சிறுமி சம்பவத்தன்று திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் திருமண வீட்டில் இருந்து கடத்தி சென்றது.
பின்னர் அந்த சிறுமியை அவர்கள் அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 5 பேரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தினர்.
விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
இதில் 3 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.