உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றில்…!!
உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிகள் உட்பட அனைத்து தொகுதிகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
88 தொகுதிகளைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (22) காலை ஜனாதிபதி சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஏப்ரல் 8, 2021 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது,சட்ட காரணங்களுக்காக தொடர்புடைய சாட்சிகள் மற்றும் குறிப்புகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணையில் தெரியவந்த விடயங்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அது தொடர்பான கோப்புகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது.