’ஒரு வருடமாகியும் ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை’ !!
அரசாங்கம் என்றவகையில், பெருந்தோட்டக் கம்பனிகளை அழைத்து தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு அரசாங்கம் கூற வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார்.
இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தை பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
இந்த உரையின் நடுவே குறுக்கீடு செய்த மனோ, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளபோதிலும் தொழிலாளர்களுக்கு இதுவரையில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படவில்லை.
நாங்கள் அரசாங்கத்தில் இல்லை. நீங்களே அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களாலேயே இதனை செய்ய முடியும். பெருந்தோட்டக் கம்பனிகளை அழைத்து, ஆயிரம் ரூபாயை தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் என அரசாங்கம் கம்பனிகளுக்கு கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.