ரஷ்யாவுக்கு எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி…!!
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1,200 கிலோ மீட்டர் நீளத்துக்கு நார்டு ஸ்ட்ரீம்-2 என்ற எரிவாயு குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நார்டு ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பணிகள் முழுமையாக முடிந்தாலும் இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படாத நிலையில் அதற்கான ஒப்புதலை ஜெர்மனி ரத்து செய்துள்ளது.
ரஷ்யா மீது கனடா நாடும் பொருளாதார தடையை விதித்துள்ளது. ரஷ்யா அங்கீகரித்துள்ள கிளர்ச்சியாளர்கள் பகுதிகள் உடனான அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. ரஷிய வங்கிகளுடனான பரிவர்த்தனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரிவினை பகுதிகளை அங்கீகரித்த ரஷிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, ‘எந்த தவறும் செய்யாதீர்கள். இது ஒரு இறையாண்மை கொண்ட அரசின் மீது மேலும் ஆக்கிரமிப்பு செய்வது ஆகும். இதனை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றார்.
மேலும் நேட்டோபடைக்கு கனடா கூடுதலாக 400 வீரர்களை அனுப்பி உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறும்போது, ‘ரஷ்யாவின் 5 வங்கிகள் மற்றும் அந்நாட்டு பெரும் பணக்காரர்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுகிறது.
தடை விதிக்கப்பட்ட 3 பணக்காரர்கள் இங்கிலாந்துக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவர்கள் இங்கிலாந்தில் தொழில் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கிடையாது’ என்றார்.
ஆஸ்திரேலியாவும், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. அதிபர் புதினின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர்கள் 8 பேருக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ராணுவ தொடர்பான ரஷிய வங்கிகள் மீதும் தடை விதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஜப்பானும், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது.