ரஷியாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்- இந்தியாவிடம் உதவி கேட்ட உக்ரைன் அதிபர்…!!
உக்ரைன் ராணுவம் தனது பணிகளை செய்து வருவதால் நாட்டுமக்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ரஷியா போர் தொடுப்பதற்கு முன்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ‘உக்ரைன் மக்களும், அரசும் அமைதியை தான் விரும்புகிறது. ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால் எங்களது நாடு, சுதந்திரம், வாழ்க்கை மற்றும் எங்களது குழந்தைகளின் வாழ்க்கை ஆகியவற்றை காக்க போராடுவோம்.
நீங்கள் எங்களை தாக்கும் போது எங்களது முகத்தை தான் பார்ப்பீர்கள். முதுகை அல்ல’ என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர் கூறும் போது, ‘நீங்கள் (ரஷியா) உக்ரைன் நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தை அளிக்க போவதாக தெரிவித்துள்ளீர்கள். ஆனால் உக்ரைன் மக்கள் சுதந்திரமாகத்தான் இங்கு இருக்கிறார்கள்’ என்றார்.
உக்ரைன் ரஷ்யா மோதல்
இதற்கிடையே ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இந்தியா இதில் தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.