’பௌத்த சிங்கள மயகமாக்கள் தொடர்கிறது’ !!
வடக்குக், கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த சிங்கள மயமாக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (24) நடைபெற்ற தாவர, விலங்கினப் பாதுகாப்புத் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழர்களின் தயாகமான வடக்குக், கிழக்கில் காணிகள் அபரிக்கப்பட்டு, சிங்கள பௌத்தமயமாக்கள் திட்டமிட்டவகையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள பௌத்த மயமாக்களை முன்னெடுக்கிறது என்றார்.
பொறுப்புவாய்ந்த மூத்த அமைச்சர்கள் கூட எங்களது போராட்டங்களை புரிந்துகொள்ளாது, நாங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துகொள்வதற்காக போராடுகிறோம் என கூறுவது, நீங்கள் இன்னும் உங்களின் கடந்தக் காலத் தவறை திருத்திக்கொள்ளவில்லை என்றே அர்த்தம். தவறை திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.