எரிபொருள் நெருக்கடியால் காய்கறிகள் அழுகின !!
எரிபொருள் நெருக்கடி காரணமாக நுவரெலியாவில் மரக்கறி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக வியாபாரிகள் நுவரெலியாவுக்கு வராத காரணத்தினால் சில மரக்கறிகள் பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.