எதிர்வரும் வாரம் வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு!!!
வடமாகாணத்தில் எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை முதல் 5ஆம் திகதி சனிக்கிழமை வரையில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு பிறகு தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாக வாய்ப்புள்ளது.
அதனால் எதிர்வரும் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் வடக்கு மாகாணம் முழுவதும் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.
இது மாதிரிகளின்(Models) அடிப்படையிலேயே கணிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக இக்காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுவதில்லை. எனினும் மாதிரிகள் தாழமுக்கம் உருவாகும் சாத்தியத்தையே வெளிப்படுத்துகின்றன.
தொடர்ச்சியாக நிலைமைகள் அவதானிக்கப்பட்டு பிந்திய நிலைமைகள் தொடர்ந்தும் இற்றைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”