உக்ரைனில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம்.. ரஷ்யா போர் தொடுக்க இதுவும் காரணம்..!! (படங்கள்)
ரஷ்ய அதிபர் புதின் பல ஆண்டுகள் திட்டமிட்டு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில், 2வது நாளாக ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் நாட்டுக்குள் முன்னேறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்ய படைகளை எதிர்க்க போதுமான வீரர்கள் இல்லாத காரணத்தால் உக்ரைன் மக்களுக்குச் சுமார் 10000 ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.
இது மட்டும் அல்லாமல் உக்ரைன் அரசு 18 -60 வயது உடைய ஆண்கள் அந்நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற புதிய உத்தரவையும் வெளியிட்டு உள்ளது. இதற்கிடையில் உக்ரைன் நாட்டின் பெரும் பகுதியை NATO படைகள் பாதுகாத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்
உக்ரைன் நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்கு ரஷ்யாவிடம் பல காரணங்கள் இருந்தாலும், உக்ரைன் நாட்டில் இருக்கும் வளங்கள் முக்கியமான காரணமாக உள்ளது. உக்ரைன் நாட்டில் இல்லாத வளங்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு வளங்கள் நிறைந்த ஒரு நாடாக உக்ரைன் உள்ளது.
இயற்கை வளம்
யுரேனியம்: ஐரோப்பா கண்டத்தில் முதல் இடம்
டைட்டானியம்: ஐரோப்பாவில் 2வது இடம், உலகில் 10வது இடம்
மாங்கனீசு: உலகளவில் 2வது இடம்
இரும்புத் தாது: உலகளவில் 2வது இடம்
மெர்குறி : ஐரோப்பாவில் 2வது இடம்
ஷேல் கேஸ்: ஐரோப்பாவில் 2வது இடம், உலகில் 13வது இடம்
நிலக்கரி: ஐரோப்பாவில்ல 7வது இடம்
விவசாயம்
இயற்கை வளங்கள்: உலகளவில் 4வது இடம்
விவசாயம்: மொத்த விளை நிலத்தில் முதல் இடம்
கருப்பு மண்: உலகின் 3வது இடம்
உக்ரைனில் இருந்து ஏராளமான பூக்கள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உக்ரைன் நாட்டின் மூலம் சுமார் 600 மில்லியன் மக்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
அணுமின் நிலையங்கள்
அம்மோனியா: ஐரோப்பாவில் முதல் இடம்
அணுமின் நிலையங்கள்: ஐரோப்பாவில் 3வது இடம் மற்றும் உலகளாவிய 8வது இடம்
அணு விசையாழிகள் (Nuclear Turbines): உலகளவில் 4வது பெரிய உற்பத்தி நாடு
ராக்கெட் லாஞ்சர்கள்: உலகளவில் 4வது இடம்
உக்ரைன் பெரும்பாலும் ரஷ்யாவைப் போலவே தன்னிறைவு பெற்ற பொருளாதாரமாகும், அதாவது யாரையும் சார்த்து இல்லாமல் இருக்கும் ஒரு நாடாகும். ஆனால் உக்ரைன் இயற்கை வளங்களில் ரஷ்யாவை விடவும் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது.
இந்தியா – உக்ரைன்
இந்தியா உக்ரைன் நாட்டில் இருந்து சமையல் எண்ணெய், பார்லி, கோதுமை எனப் பல பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இதேபோல் உக்ரைன் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து அதிகப்படியான மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் எதிரொலி: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் கடும் சரிவு…!!
ரஷியாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்- இந்தியாவிடம் உதவி கேட்ட உக்ரைன் அதிபர்…!!
உக்ரைனில் 2 நகரங்களை கைப்பற்றி உள்ளோம்- ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் அறிவிப்பு…!!
உக்ரைன் கீவ் நகரம் அருகே விழுந்து நொறுங்கியது ராணுவ விமானம்- 14 பேர் கதி என்ன?..!!
உக்ரைன் மீதான படையெடுப்பு காலத்தின் கட்டாயம் – ரஷிய அதிபர் புதின் கருத்து..!!
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளை அனுப்பும் திட்டமில்லை – ஜோ பைடன் அறிவிப்பு…!!
செர்னோபில் நகரை கைப்பற்றியது ரஷியா – அணுமின் நிலையம் மீதான தாக்குதலால் கதிர்வீச்சு அபாயம்..!!
ரஷியாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் உருக்கம்…!!