யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு 85 குழந்தைகள் உயிரிழப்பு!!
யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மாத்திரம் 85 சிசுக்கள் உயிரிழந்துள்ளதாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு 5ஆயிரத்து 823 குழந்தைகள் பிறந்துள்ளன. அதேவேளை தாயின் கருவில் 28 வாரங்களின் பின்னர் கரு சிதைவு காரணமாக 46 சிசுக்கள் உயிரிழந்துள்ளதுடன், பிறந்து 7 நாட்களுக்குள் 39 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”