;
Athirady Tamil News

சிங்கள மக்கள் மத்தியிலும் பேராதரவு!

0

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் மற்றுமொறு கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) நீர்கொழும்பு பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் இதற்கு மிகப்பாரியளவில் இதற்கு ஆதரவு கிடைத்திருந்தது.

இந்த நிலையிலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் மற்றுமொறு கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நீர்கொழும்பு பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றிருந்த குறித்த நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கொண்டிருந்தனர்.

குறிப்பாக சிங்கள மக்கள் அதிகளவில் ஒன்று கூடி பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் கையொப்பமிட்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “இன்றைய நாள் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியான நாள். காரணம் சிங்கள மக்களும் அதிகளவில் ஒன்று கூடி பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி கையொப்பமிட்டுள்ளனர்.“ எனக் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.