காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் காணி அமைச்சர் தலைமையில் வவுனியாவில் நடமாடும் சேவை!! (படங்கள்)
காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் காணி அமைச்சர் தலைமையில் வவுனியாவில் நடமாடும் சேவை
வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் காணப்படும் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான காணி அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று காணி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இவ் நடமாடும் சேவை இன்று (27.02) காலை முதல் மாலை வரை இடம்பெற்றது.
வன்னியின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட காணி தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவற்றிற்கு விரைவான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி அவர்கள் காணி அமைச்சர் அவர்களுக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக, குறித்த நடமாடும் சேவை இடம்பெற்றது.
இதன் போது வன வள திணைக்கள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்ட காணிகள் உட்பட வன்னி மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு இதன்போது தீர்வு காணப்பட்டது.
குறித்த நடமாடும் சேவையில் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், கே.கே.மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், காணி அமைச்சின் செயலாளர், காணி அமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர்கள், வடமாகாண பிரதம செயலாளர், வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.