கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம்!! (படங்கள், வீடியோ)
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் 11, 12 திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் தற்போதுள்ள கொரோனா இடர் நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 100 பேர் மாத்திரமே கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கு அனுமதிப்பது என வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
எதிர்வரும் 11, 12 திகதிகள் நெடுந்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் உற்சவம் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த உற்சவத்தில் கலந்து கொள்பவர்கள் கொரோனா தடுப்பூசி அட்டைகள் வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மாத்திரம் கலந்து கொள்ளும் நிலையில் ஆலய வளாகத்தினுள் எவ்விதமான வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது எனவும் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் சுகாதார நடைமுறைகள் சமூக இடைவெளிகள் என்பன பின்பற்றப்படும் என தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் கடற்படையின் உயரதிகாரிகள் நெடுந்தீவு பிரதேச செயலர், ஊர்காவற்றுறை பிரதேச சபை, செயலர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் சார்பானது தானே இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராம் மகேஷ் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் ஜோசப் ஜெபரட்ணம் அடிகளார், உதவி மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”