எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல துறைகளில் பாதிப்பு !!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து மற்றும் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
டீசல் தட்டுப்பாடு காரணமாக தினமும் சுமார் 30 மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்வதில்லை என தொடந்துவ மீன்பிடி துறைமுக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மரக்கறி லொறிகளுக்கான டீசலை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கொழும்பில் மரக்கறி லொறிகளின் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மரக்கறிகள் சுமார் 50% குறைந்துள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, திருகோணமலை மொரவெவ பிரதேசத்தில் சுமார் 300 ஏக்கரில் அறுவடையை விவசாயிகள் ஆரம்பித்துள்ள போதிலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அறுவடையை இடைநிறுத்தியுள்ளனர்.