மேலும் 26 மீட்பு விமானங்கள் இயக்கம்: கீவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேற்றம்- மத்திய அரசு…!!
உக்ரைன் மீது ரஷிய கடந்த வியாழக்கிழமையில் இருந்து ஒரு வாரமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கீவ், கார்கீவ் பகுதிகளில் தாக்குதலை அதிகரித்துள்ளது. ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், வீடுகளில் தங்கியிருப்போர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் கீவ் மற்றும் கார்கீவ் நகரில் உள்ள இந்தியவர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது. அவர்கள் உக்ரைன் அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டு ஆபரேசன் கங்கா திட்டம் மூலம் இந்திய அரசால் இந்தியா அழைத்து வரப்படுகிறார்கள்.
நேற்று, கார்கீவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்தியர்களை அழைத்து வரும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.
உக்ரைனில் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 12 ஆயிரம் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டனர். இது மொத்த எண்ணிக்கையில் 60 சதவீதம் என வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள 40 சதவீதம் பேரில் பாதி பேர் மிகவும் கடினமான கார்கீவ் பகுதியில் உள்ளனர். பாதிபேர் உக்ரைனின் வடக்கு பகுதி மற்றும், உக்ரைனின் வடக்கு பகுதியை நோக்கி வந்துள்ளனர். அவர்கள் சிக்கலான பகுதியை கடந்துவிட்டனர்.
கங்கா திட்டம் மூலம் 46 விமானங்கள் மார்ச் 8-ந்தேதி வரை இயக்கப்படும். இதில் 29 விமானங்கள் புகாரெஸ்ட், 10 விமானங்கள் புதாபெஸ்ட், ஆறு விமாங்கள் போலந்தது, ஒரு விமானம் ஸ்லோவாகியா ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும். இதனோடு ஒரு விமானப்படை விமான புகாரெஸ்டில் இருந்து இயக்கப்படும்.
அடுத்த மூன்று நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். உக்ரைனில் மோசமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், உயர் அதிகாரிகளுடன் பிரதர் மோடி நான்கு முறை அவசர ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.