இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!!
இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவுசெய்வதற்கான, விற்பனைசெய்வதற்கான, பரிமாற்றம்செய்வதற்கான அனுமதி, அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கும் (அதாவது உரிமம்பெற்ற வங்கிகள்) இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கும் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகையினால், வெளிநாட்டு நாணயத்தின் கொள்வனவு, விற்பனை அல்லது பரிமாற்றம் என்பன அதிகாரமளிக்கப்பட்ட வணிகர் ஒருவர் ஊடாக அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படல் வேண்டும்.
2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எவரேனும் ஆள், நிறுவனம், அல்லது ஏதேனும் வேறு அமைப்பு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையொன்றாகும்.
எனவே, அதிகாரமளிக்கப்படாத எவரேனும் ஆள், நிறுவனம் அல்லது ஏதேனும் அமைப்பு வெளிநாட்டு நாணய வணிகங்களில் ஈடுபடுகின்றமை அவதானிக்கப்படுமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அல்லது மின்னஞ்சல் வாயிலாக இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு இத்தால் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.