இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்புான மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது – எஸ் சிறிதரன்!! (வீடியோ)
எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக்கொண்ட இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்புான மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று முற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய நாட்களில் மிக மு்கியமாக இலங்கை நாட்டிலே உள்ள எரிபொருள் தட்டுப்பாடுகளினபல் மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களை சொல்கின்றனர். அதேநேரம் கிளிநொச்சி மாவட்டம் விவசாய மாவட்டம். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே பொருளாதாரமாகவு்ம, ஜீவனோபாயமாகவும் கொண்டு செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்க மாகாணங்களில் நெற்செய்கை குறிப்பாக பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு செல்லுங்கள் என ஒரே இரவிலேயே இந்த அரசாங்கம் அறிவித்ததன் காரணமாக இம்முறை அறுவடை மிகப்பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”