பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு!!
இன்று (02) அதிகாலை பெண் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுரலிய கெலின்கந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் பதுரலிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்திரலதா பத்மினி என்ற 53 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளார்.
குறித்த பெண்ணுடன் சிறிது காலம் ஒரே வீட்டில் வசித்து வந்த ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்குமிடையிலான தனிப்பட்ட தகராறே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக மத்துகம பாளிகா வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.