கச்சா எண்ணெய் 110 டொலரை நெருங்குகிறது !!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலரை நெருங்கியுள்ளது.
எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதற்காக 60 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை இருப்புகளில் இருந்து விடுவிக்க சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது ஐநா பொதுச் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
ஏறக்குறைய 100 நாடுகள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.