உத்தேச மிகை வரி சட்டமூலத்தில் இருந்து 13 நிதியங்கள் நீக்கம்!!
ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) உள்ளிட்ட 13 நிதியங்கள் உத்தேச மிகை வரி சட்டமூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு இந்த விடயத்தினை இன்று அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிகை மதிப்பு வரி சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகளின் போதே, சட்ட மாஅதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.