;
Athirady Tamil News

மத்திய வங்கியின் அதிரடி தீர்மானம்!

0

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கான தொடர்ச்சியான இடையூறுகளையும் பரிசீலனையிற்கொண்டு, அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ள ஏனைய முயற்சிகளுடன் இணைத்து மரபுசார்ந்த மற்றும் மரபுசாராத வழிமுறைகள் இரண்டையும் உள்ளடக்குகின்ற அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கை சார்ந்த திட்டமொன்று அத்தியாவசியமானது என நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது.

அதற்கமைய, உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியாகவும் தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்ட பொருளாதார அபிவிருத்திகளை கவனமாக பரிசீலனையிற் கொண்டதன் பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மாச்சு 03ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், 2022 ஜனவரியில் பின்பற்றப்பட்ட அதன் நிலைப்பாட்டை மீளவும் வலுப்படுத்துவதற்கு தீர்மானித்ததுடன், பின்வரும் தீர்மானங்களையும் மேற்கொண்டிருந்தது:

(அ) மத்திய வங்கியின் துணை நில் வைப்பு வசதி வீதத்தினையும் துணை நில் கடன் வழங்கல் வீதத்தினையும் முறையே 6.50 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் ஒவ்வொன்றையும் 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்தல்

(ஆ) கடன் அட்டைகளுக்கு ஏற்புடைய வட்டி வீதங்கள் மீது விதிக்கப்படும் வீதங்களை ஆண்டிற்கு 20 சதவீதத்திற்கும், முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்றுக்கள் மீது ஆண்டிற்கு 18 சதவீதத்திற்கும், அத்துடன் அடகு வசதிகள் மீது ஆண்டிற்கு 12 சதவீதத்திற்கும் உச்ச வீதங்களை மேல்நோக்கித் திருத்துதல். இத்தகைய ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பணிப்புரைகள் விரைவில் விடுக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.