;
Athirady Tamil News

சட்டவிரோதமாக 30க்கும் அதிகமான ஆடுகளை கொண்டு சென்ற இருவர் கைது!! (படங்கள் & வீடியோ)

0

உரிய அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 30க்கும் அதிகமான வளர்ப்பு ஆடுகளை கல்முனை பொலிசாஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை காவலரணில் குறித்த ஆடுகளை கொண்டு வந்த லொறி உட்பட இருவர் வெள்ளிக்கிழமை(4) மதியம் கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டம் தோப்பூர் பகுதியில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி கொண்டுவரப்பட்ட சுமார் 30 க்கும் அதிகமான ஆடுகளே இவ்வாறு கல்முனை பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

இவ்வாறு சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி கால்நடைகளை லொறி ஒன்றில் அடைத்து சென்ற நிலையில் மீட்கப்பட்ட ஆடுகள் தொடர்பிலான நடவடிக்கையினை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.எம். லசந்த புத்திகவின் நெறிப்படுத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சிசிரகுமார (53500) றஹீம் (44013) பொலிஸ் உத்தியோகத்தர்களான சேனநாயக்க (92729) பொலிஸ் சாரதி வசந்த(80873)உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.

மேலும் குறித்த ஆடுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற 47 வயது மற்றும் 59 வயது இரு சந்தேக நபர்களை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.