கடனை செலுத்துவதற்கான அனைத்து மாற்று வழிகளும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன!!
இலங்கை பெற்றுள்ள கடனை செலுத்துவதற்கான அனைத்து மாற்று வழிகளும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கைக்கு இன்னமும் கடன் செலுத்துவதற்கான வல்லமை காணப்படுவதாகவும் கூறினார்.
தமது தீர்மானங்களையும் கொள்கையையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதிக்கும் நிதியமைச்சருக்கும் அவற்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கி என்ற அடிப்படையில் அதன் நிலைப்பாட்டையும் நாட்டிற்குச் செய்ய வேண்டிய விடயங்களையும் அரசியல் பேதம் இன்றி தெளிவுபடுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பணிப்புரை வழங்குவது மத்திய வங்கியின் பொறுப்பாகும். மத்திய வங்கி என்ற அடிப்படையில் அரசாங்கத்திடம் முன்வைக்கும் யோசனைகளை கருத்திற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை தொழில்நுட்பம் சார்ந்த கோரிக்கைகளாகும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்தார்.