நாட்டை விட்டுச்செல்ல அரசியல்வாதிகள் முயற்சி !!
ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர், பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டுச் செல்வதற்கு தயாராகி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில், சில, பல காரணங்களுக்காக அரசாங்கத்தின் செயற்பாட்டினால் அதிருப்தியடைந்த சிலரும் இருக்கின்றனர் என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மூன்று மாத விடுமுறையில் ஜப்பானுக்குச் சென்றுள்ளார். அவருக்கான விடுமுறைக்கு பாராளுமன்றம் கடந்தவாரம் அங்கிகரித்து இருந்தது.
இந்நிலையில், மற்றுமோர் இராஜாங்க அமைச்சரான நிமல் லன்சா, வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, சில நாட்களுக்கு வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களாக பதவி வகித்த பலரும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தயாராகி வருகின்றனர் என அறியமுடிகிறது.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போதும் தங்களுக்கு எவ்விதமான பொறுப்புவாய்ந்த அமைச்சு, பிரதியமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கூட கிடைக்காமையால் சிலர் அதிருப்தியில் உள்ளனர் என்றும் அவர்களும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தயாராகி வருகின்றனர் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.